‘பிலிம் நியூஸ் ஆனந்தன்’: திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர்!

பிலிம் நியூஸ் ஆனந்தன்
பிலிம் நியூஸ் ஆனந்தன்

தென்னிந்திய சினிமாவின் நடமாடும் தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். அவரது நினைவு தினத்தை ஒரு நாள் தாமதமாக தமிழகம் நினைவுகூர்கிறது.

வெகுஜன சினிமாவுக்கு அதன் ரசிகர்களே உயிர்நாடி. திரைக்கலைஞர்களும், படைப்பாளர்களும் தங்களது இருத்தலையும், ரசிகர்களுடனான தொடர்பையும் உயிரோடு வைத்திருக்க சினிமா மக்கள் தொடர்பாளர்கள் அத்தியாவசியம். இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கலைஞர்களும், படைப்புகளும் எளிதில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் இல்லாத அக்காலத்தில் மக்கள் தொடர்பாளர்கள் பணி அளப்பரியதாக இருந்தது. அப்படி தமிழ் சினிமாவில் முதல் மக்கள் தொடர்பாளராக சிறப்பு பெற்றவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

இயல்பில் புகைப்படக்கலை மீதும் சினிமாத்துறை மீதும் ஆர்வம் கொண்டிருந்த ஆனந்தன், தான் எடுத்த சினிமா கலைஞர்களின் படங்களை, தனது நண்பர் நடத்தி வந்த ‘பிலிம் நியூஸ்’ இதழில் பிரசுரிக்க தந்ததில் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆனார். அவரைப் பின்பற்றி ஏராளமானோர் திரையுலகுக்கு படையெடுத்த போதும், பிலிம் நியூஸ் ஆனந்தனின் இடத்தை நிரப்புவோர் இது வரை இல்லை. அந்தளவுக்கு திரைத்துறையின் நடமாடும் தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

2016, மார்ச் 21 அன்று வயோதிகம் காரணமாக மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனின் 7வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆனந்தனின் நினைவுகளை வருடந்தோறும் மறக்கமால் போற்றும் கமல்ஹாசன், இம்முறை வெளிநாட்டில் இருந்தபோதும் சமூக ஊடகம் வாயிலாக தனது அஞ்சலியை பதிவு செய்திருந்தார். அதில் ‘தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 7வது ஆண்டு நினைவு நாள் இன்று. இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் இருந்து அவரது நினைவுகளை அசை போடுகிறேன்.அவரால் தமிழ் சினிமா பெற்றவை அதிகம். ஆனந்தன் செய்த ஆவணப்படுத்துதலை நாமும் தொடர்வதே அவருக்கான சிறந்த அஞ்சலி’ என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலரும் தங்கள் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in