
தமிழ் நடிகை அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’காதம்பரி’படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ்ப் பெண்ணான இவர், தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பாடகியாகவும் வலம் வந்த அகிலா, ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தினரும் சம்மதித்தனர்.
கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவர் ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ (Nightingale School of Music) என்ற இசைப் பள்ளியையும் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.