தமன்னாவின் புதிய படம் ‘பப்ளி பவுன்சர்': 3 மொழிகளில் ரிலீஸ்

தமன்னா
தமன்னா

மதுர் பண்டர்க்காரின் அடுத்த திரைப்படமான ‘பப்ளி பவுன்சர்’ (BABLI BOUNCER)-ல் தமன்னா பாட்டியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மிகத் தனித்துவம் வாய்ந்த கதையின் தயாரிப்பை தொடங்க ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் கைகோர்த்திருக்கின்றன. இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்.

இந்த படத்தில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

“ஒரு பெண் பவுன்சரின் இந்தக் கதையை வாழ்க்கையோடு இணைந்த நகைச்சுவை இழையோடு சித்தரிக்க விரும்புகிறேன். அதுவும் மனதைவிட்டு அகலாத ஒரு நீடித்த தாக்கத்தை விளைவிக்கிறது. தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டர்க்கார் கூறினார்.

நடிகை தமன்னா பாட்டியா கூறும்போது, “பப்ளி பவுன்சர் கதையைப் படித்தவுடனே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் காதல் வசப்பட்டுவிட்டேன். ஏனென்றால், நான் இதுவரை கண்ட அனைத்தைக்காட்டிலும் இது ஒரு மிகவும் உற்சாகமான மற்றும் கேளிக்கையான கதாபாத்திரமாகும். ஒரு திரைப்படம் ஒரு பெண் பவுன்சரின் கதையை முதல் முதலாக ஆராயப்போகிறது. அந்த கதாபாத்திரத்தின் குரலாக நான் ஒலிக்கப்போகிறேன் என்பதை அறிந்து அளவிடமுடியாத உற்சாகத்தில் இருக்கிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in