‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா!

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா!

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ’ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ரஜினியின் 169-வது படமாக உருவாகும் இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் வேறு சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால், இதில் நடிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக இப்போது நடிகை தமன்னா, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் ஆகஸ்ட் 15 அல்லது 22-ம் தேதி தொடங்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in