
நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என்று வெளியான செய்திக்கு நடிகை தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழில் ‘பையா’, ‘தோழா’ உள்ளிட்டப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் தமன்னா. தற்போது, பாலிவுட்டில் படங்கள் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாது, ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படத்திலும் நடிகை கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். நடிகர் விஜய் வர்மாவுடன் பாலிவுட்டில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் இணைந்து நடித்தார் தமன்னா. இப்போது அவருக்கும், விஜய் வர்மாவுக்கும் காதல் என அவருடன் இணைந்து இருக்கும்படியான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விஜய் வர்மாவுடன் காதல் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமன்னா விளக்கமளித்துள்ளார். அதில், "விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் அவருடன் காதல் என்று செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு விளக்கம் கொடுப்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். சினிமாவைப் பொருத்த மட்டும் நடிகர்களை விடவும் நடிகைகளே அதிக திருமண வதந்தி செய்திகளில் வருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு புரியவில்லை. நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே டாக்டர், தொழிலதிபர் எனப் பலருடன் எனக்குப் பலமுறை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.