’ஷூட்டிங்ல இருந்தோம்னே நினைக்கல’: தமன்னா மகிழ்ச்சி

’ஷூட்டிங்ல இருந்தோம்னே நினைக்கல’: தமன்னா மகிழ்ச்சி

`` ’பப்ளி பவுன்சர்’ படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை'' என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் தமன்னா, இப்போது ‘பப்ளி பவுன்சர்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். பெண் பவுன்சர் ஒருவரின் வாழ்க்கையை ஜாலியாகச் சொல்லும் படமான இதை, மதுர் பண்டார்கர் இயக்குகிறார். புறநகர் டெல்லியில் உள்ள பவுன்சர் நகரம் என்றழைக்கப்படும் அசோலா பதேபூரில் (Asola Fatepur) வசிக்கும் பெண்ணின் கதையாக இது உருவாகிறது.

மதுர் பண்டார்கர், தமன்னா
மதுர் பண்டார்கர், தமன்னா

இதில், தமன்னாவுடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வைத் உட்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பான் இந்தியா படமாக உருவாகும் இதன் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

``இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. படப்பிடிப்பு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் செல்ல, இயக்குநர் மதுர் பண்டார்கர்தான் காரணம். இடைவிடாமல் தொடர்ந்து வேலை செய்தாலும் படப்பிடிப்பில் இருக்கிறோம் என்பதை ஒரு போதும் உணரவில்லை. எனது சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in