படம் வெளியாவதற்கு முன்பே கோடிகளில் விற்பனையான 'தளபதி 68' இசை உரிமம்!

விஜய், யுவன்
விஜய், யுவன்படம் வெளியாவதற்கு முன்பே கோடிகளில் விற்பனையான 'தளபதி 68' இசை உரிமம்!

படம் தொடங்குவதற்கு முன்பே நடிகர் விஜய்யின் 68-வது படத்தின் இசை உரிமம் விற்பனை குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெளியானது. ‘லியோ’ படம் வெளியான பின்பே ‘தளபதி 68’ படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என இயக்குநர் வெங்கட்பிரபு சொல்லி இருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு விஜய்-யுவன் கூட்டணி ஒன்றிணைவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இதன் இசை உரிமம் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய்க்கும் மேல் விற்றுத் தீர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் விஜய் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து வருவதும், பாடல்கள் இணையத்தில் டிரெண்ட்டிங்கிலும் இருந்து வரும் நிலையில், யுவன் இந்த எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in