டாப்ஸியின் `சபாஷ் மித்து’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

டாப்ஸியின் `சபாஷ் மித்து’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மிதாலி ராஜின் வாழ்க்கைக் கதையான 'சபாஷ் மித்து' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். முன்னணி வீராங்கனையான இவர், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக அதிக ரன்கள் குவித்தது, ஆறு உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்பது உட்பட பல சாதனைகளை அவர் வைத்துள்ளார். அவருடைய வாழ்க்கைக் கதை ’சபாஷ் மித்து’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை டாப்ஸி பன்னு, மிதாலி ராஜ் கேரக்டரில் நடித்துள்ளார். 8 வயதில் இருந்து கிரிக்கெட் கனவுடன் இருக்கும் ஒரு பெண், எப்படி அந்த உயரத்தை அடைகிறார் என்பது மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பிரியா அவென் எழுதியுள்ளார்.

வயாகாம்18 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 15-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக நடிகை டாப்ஸி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கனவும் அதை செயல்படுத்தும் திட்டமும் கொண்ட பெண்ணை விட சக்தி வாய்ந்தது ஏதுமில்லை. ஜென்டில்மேன் விளையாட்டு என்கிற கிரிக்கெட்டில், பேட்டால், தனது கனவைத் துரத்திய ஒரு பெண்ணின் கதைதான் சபாஷ் மித்து. ஜூலை 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in