`சுதந்திரம் சொந்தமா இருக்கணும், அது கொடுக்கப்படக் கூடாது’: டாப்ஸி

`சுதந்திரம் சொந்தமா இருக்கணும், அது கொடுக்கப்படக் கூடாது’: டாப்ஸி

``சுதந்திரம் சொந்தமாக இருக்க வேண்டும். அது கொடுக்கப்படக் கூடாது'' என்ற கருத்தை மையமாக வைத்து படம் தயாரிப்பதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த டாப்ஸி, பாலிவுட் சென்றதும் முன்னணி நடிகையானார். அங்கு அவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அது போன்ற கதைகளை கொண்ட பிங்க், நாம் ஷபானா, தப்பட் உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டில் வரவேற்பைப் பெற்றன. இப்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதையான சபாஷ் மித்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

தக் தக் பட போஸ்டரில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி
தக் தக் பட போஸ்டரில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி

இதற்கிடையே அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்கு அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சமந்தா நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் அவர் அடுத்து, `தக் தக்' என்ற படத்தையும் வயாகாம்18 ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். இது நான்கு பெண்களை மையமாகக் கொண்ட கதை. படத்தை தருண் துடேஜா இயக்குகிறார். இதில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதுபற்றி நடிகை டாப்ஸி கூறும்போது, ``திரையில் எப்போதும் காணக் கிடைக்காத கதைகளை ரசிகர்களுக்குச் சொல்ல முயற்சித்திருக்கிறோம். சுதந்திரம் சொந்தமாக இருக்க வேண்டும். அது கொடுக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்த 4 பெண்களின் கதைதான் இந்தப் படம்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in