கரோனா பின்னணியில் உருவாகும் ஆந்தாலஜியில் டாப்ஸி

கரோனா பின்னணியில் உருவாகும் ஆந்தாலஜியில் டாப்ஸி
டாப்ஸி

கரோனா பின்னணியில் உருவாகும் ஆந்தாலஜி படத்தில் டாப்ஸி நடிக்கிறார்.

‘ஆடுகளம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி, பிறகு தெலுங்குக்குச் சென்றார். இப்போது இந்திப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள, ‘லூப் லபேடா’ (Looop Lapeta) என்ற இந்திப் படம், நெட்ஃப்ளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

டாப்ஸி, அனுபவ் சின்ஹா, சுதிர் மிஸ்ரா
டாப்ஸி, அனுபவ் சின்ஹா, சுதிர் மிஸ்ரா

இப்போது, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையான ’சபாஷ் மித்து’ படத்தில் நடித்துவரும் டாப்ஸி, அடுத்து ஆந்தாலஜி படம் ஒன்றில் நடிக்கிறார். கரோனாவை பின்னணியாகக் கொண்ட இந்த ஆந்தாலஜியில் இடம்பெறும் படங்களை, சுதிர் மிஸ்ரா, ஹன்சல் மேத்தா, கேதன் மேத்தா, சுபாஷ் கபூர் ஆகியோர் இயக்குகிறார்கள். இயக்குநர் அனுபவ் சின்ஹாவின், பனாரஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் டி-சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

அனுபவ் சின்ஹா, டாப்ஸி நடிப்பில் ஏற்கெனவே முல்க், தப்பாட் படங்களை இயக்கியவர். “கடந்த 2 வருடங்களாக, மனித குலம் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக கரோனா இருந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தின் மனித உணர்வுகளை சொல்லும் படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தின் சிறந்த கலைஞர்களில் டாப்ஸியும் ஒருவர். அவர் பங்களிப்பு, கதையை இன்னும் உயர்த்தும்” என்கிறார் அனுபவ் சின்ஹா. டாப்ஸி நடிக்கும் கதையை சுதிர் மிஸ்ரா இயக்குகிறார்.

Related Stories

No stories found.