‘ஞாயிறுக்கு அப்புறம் திங்கள்... தை பிறந்தால் பொங்கல்’ - இசையோடு பாடி ஆச்சர்யப்படுத்திய டி.ராஜேந்தர்!

‘ஞாயிறுக்கு அப்புறம் திங்கள்... தை பிறந்தால் பொங்கல்’ - இசையோடு பாடி ஆச்சர்யப்படுத்திய டி.ராஜேந்தர்!

‘ஞாயிறுக்கு அப்புறம் திங்கள்... தை பிறந்தால் பொங்கல்’ என்ற வார்த்தைகளுடன், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இசையுடன் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்

தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுபோல பல தலைவர்களும் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழலில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது பாணியில் பொங்கல் வாழ்த்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “குடும்பத்தோட கண்கள்... அதுதானே பெண்கள். ஞாயிறுக்கு அப்புறம் திங்களு...தை பிறந்தால் பொங்கலு. சூரியனுக்கு படைக்கத்தான் சக்கர,சக்கர பொங்கல். கதிர் தரும் கதிரவன கரும்பா நினைக்கும் பொங்கலு” என உற்சாக பாடி இசைக்கருவிகளையும் அவர் இசைத்துள்ளார். உடல்நல பாதிப்பு காரணமாக சில மாதங்களாக சில மாதங்களாக ஓய்வில் இருந்த டி.ஆர், மீண்டும் பழைய உற்சாகத்துடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in