தந்தை டி.ராஜேந்தரை நாளை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்கிறார் சிம்பு!

தந்தை டி.ராஜேந்தரை நாளை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்கிறார் சிம்பு!

மருத்துவ சிகிச்சைக்காக, டி.ராஜேந்தர், நாளை அமெரிக்கா செல்கிறார்.

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதைக் கண்டனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். விசா நடைமுறைகள் தாமதமானதால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. இப்போது விசா கிடைத்ததை அடுத்து, நாளை இரவு அங்கு செல்கின்றனர். அமெரிக்காவில் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நடிகர் சிம்பு, கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. நாளை இரவு, துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தருடன் நடிகர் சிம்பு மற்றும் அவர் குடும்பத்தினரும் அமெரிக்கா செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in