விரைவில் டும் டும் டும்: சிம்புவுக்குத் தீவிரமாகப் பெண் பார்க்கும் டி.ஆர் குடும்பம்!

விரைவில் டும் டும் டும்: சிம்புவுக்குத் தீவிரமாகப் பெண் பார்க்கும் டி.ஆர் குடும்பம்!

சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட டி.ராஜேந்தர், அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட பின்னர் தற்போது நலம் பெற்றுவருகிறார். அத்துடன், மருத்துவர்களின் அறிவுரைப்படி வழக்கமான வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வீட்டில் பூரண ஓய்வில் இருக்கிறார். இந்தச் சூழலில், அவரது மகனும் நடிகருமான சிம்புவுக்குத் திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர்.

நடிகர் சிம்பு தற்போது, ’பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். தற்போது 39 வயதாகும் சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும் என அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், டி.ராஜேந்தரின் சொந்த பூமியான மயிலாடுதுறை பகுதியில் சிம்புவுக்குப் பெண் தேடும் படலம் தீவிரமாக நடந்துவருகிறது. டி.ராஜேந்தர் ஓய்வில் இருப்பதால் அவரது மனைவி உஷாதான் பெண் பார்க்கிறார். இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இதற்காக மயிலாடுதுறை செல்கிறாராம் உஷா. கூடவே சிம்புவின் தங்கை இலக்கியாவும் சென்று அண்ணனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுவதாகச் சொல்கிறார்கள்.

டி.ஆர் குடும்பத்தினர் காட்டும் இந்த வேகத்தைக் கவனித்த கோலிவுட் வட்டாரம், அடுத்த வருடம் சிம்புவுக்குக் கால்கட்டு நிச்சயம் என்கிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in