லாரா லஷ்மி ஆனார்... நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் ஒரு புதுமை திருமணம்!

எஸ்.வி.சேகர் உறவினர் திருமணம்
எஸ்.வி.சேகர் உறவினர் திருமணம்

நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் உறவினர் மகன் ஆஞ்சன் ரவி என்பவரின் திருமணம் சென்னை அகார்டு ஹோட்டலில் நடைபெற்றது.

அமெரிக்காவில் பணியாற்றி வரும் ஆஞ்சன், அமெரிக்க பெண்ணான லாரா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் சென்னையில் இந்து முறைப்படி நடந்தது.

மணமக்களுடன் எஸ்.வி.சேகர்
மணமக்களுடன் எஸ்.வி.சேகர்

மணமகனின் தாய் உஷா ரவி, தந்தை ரவி ஆகியோர் முன்னிலையில், எஸ்.வி.சேகர் மணப்பெண்ணின் தந்தை ஸ்தானத்தில் இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசி வழங்கினார். இந்து மதத்தின் மேல் பெரும் மதிப்பு கொண்ட லாரா, தனது பெயரை லஷ்மியாக மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in