சஸ்பென்சாக இருந்த 'தளபதி67' படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்!

விஜய்யுடன் த்ரிஷா
விஜய்யுடன் த்ரிஷாசஸ்பென்சாக இருந்த 'தளபதி67' படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்!

விஜய் நடித்த `வாரிசு' பட வெளியீடு காரணமாக தளபதி67 படம் குறித்த தகவல்கள் சஸ்பென்சாக இருந்தன. இந்தச் சூழலில் தயாரிப்பு நிறுவனம் தற்போது ‘தளபதி 67’ படத்தின் பூஜை நிகழ்வு வீடியோவை பகிர்ந்துள்ளது.

தமிழ் திரைத் துறையின் உச்ச நகடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து வரும் புதிய படம் ‘விஜய் 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில், அது குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களாக பகிர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கியது. இருந்தும் விஜய் நடித்த வாரிசு பட வெளியீடு காரணமாக அது குறித்த தகவல்கள் சஸ்பென்சாக இருந்தன. இந்தச் சூழலில் தயாரிப்பு நிறுவனம் தற்போது ‘தளபதி 67’ படத்தின் பூஜை நிகழ்வு வீடியோவை பகிர்ந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமல்லாது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in