திருமணம் ஆகவில்லை, மோதிரம் மாற்றவில்லை…. நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருக்கிறேன்: டேட்டிங் ட்விட் பற்றி மனம் திறந்த பிரபல நடிகை!

திருமணம் ஆகவில்லை, மோதிரம் மாற்றவில்லை…. நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருக்கிறேன்: டேட்டிங் ட்விட் பற்றி மனம் திறந்த பிரபல நடிகை!

’நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருக்கிறேன்’என்று நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் நடித்துள்ளார். ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இவர் கடந்த சில வருடங்களாக, தன்னை விட 15 வயது குறைந்த ரோஹ்மன் சாவ்ல் என்பவரைக் காதலித்து வந்தார். பிறகு கடந்த வருடம் இருவரும் பிரிந்தனர். இதுபற்றி சுஷ்மிதா சென் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

லலித் மோடி, சுஷ்மிதா சென்
லலித் மோடி, சுஷ்மிதா சென்

இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, சுஷ்மிதா சென்னை டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். லலித் மோடி, நிதி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் அளித்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறை அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், லலித் மோடி, லண்டனில் வசித்து வருகிறார்.

நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர், சுஷ்மிதாவை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். ”மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டனுக்கு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். என் ’பெட்டர்ஹாஃப்’ சுஷ்மிதா சென் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. கடைசியாக ஒரு புதிய தொடக்கம், புதிய வாழ்க்கை. நிலவில் இருப்பதை போன்று உணர்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

வளர்ப்பு மகள்கள் ரெனி சென், அலிஷா சென்னுடன் சுஷ்மிதா
வளர்ப்பு மகள்கள் ரெனி சென், அலிஷா சென்னுடன் சுஷ்மிதா

இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் சில வருடங்களுக்கு முன் இருவரும் ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களைப் பதிவிட்டும் நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்ய தொடங்கினர். பின்னர் ’’தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இது. திருமணம் செய்துகொள்ளவில்லை. வெறும் டேட்டிங் மட்டுமே. ஆனால், அதுவும் ஒரு நாள் நடக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென்னும் இந்தக் காதலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது வளர்ப்பு மகள்கள் ரெனி சென், அலிஷா சென் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மிதா சென், ‘’நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றவில்லை. நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருக்கிறேன். போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. என் மகிழ்ச்சியில் பங்குகொண்டதற்கு நன்றி. பங்கு கொள்ளாதவர்களுக்கு, இது உங்களுக்குத் தேவையில்லாதது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in