நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு: தகவல்களை வழங்க சிபிஐ மறுப்பு

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு: தகவல்களை வழங்க சிபிஐ மறுப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு பற்றி கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு பதிலளிக்க, சிபிஐ மறுத்துவிட்டது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் இவர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி தனது மும்பை வீட்டில் உயிரிழந்த நிலையில் இவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ இப்போது விசாரித்து வருகிறது. சம்பவம் நடந்து 2 வருடங்கள் ஆன நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

அதில் அந்த வழக்குத் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் அவர் மரணம் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்க சிபிஐ மறுத்துவிட்டது.

சிபிஐ அளித்துள்ள பதிலில், ’சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு இன்னும் விசாரணையில்தான் இருக்கிறது. விசாரணை முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியே தெரிந்தால், அது விசாரணைக்கு இடையூறாக இருக்கலாம். அதனால், நீங்கள் கேட்ட தகவல்களை வழங்க இயலாது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.