விஜய் ஆண்டனி நடிப்பில் பான் இந்தியா படம் இயக்கும் சுசீந்திரன்!

விஜய் ஆண்டனி நடிப்பில் பான் இந்தியா படம் இயக்கும் சுசீந்திரன்!

விஜய் ஆண்டனி நடிப்பில் பான் இந்தியா படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார்.

ஜெய் நடித்த ‘வீரபாண்டியபுரம்’, ‘குற்றம் குற்றமே’ படங்களுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படம், ’வள்ளி மயில்’. இதில், விஜய் ஆண்டனி , சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கின்றனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். இவர், தெலுங்கில் வெளியான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நடித்தவர்.

ஃபரியா அப்துல்லா
ஃபரியா அப்துல்லாRagalahari.com

மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 1980-ம் கால கட்டப் பின்னணியில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு மே16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி நடக்க இருக்கிறது. படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். விஜய்.கே.சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in