சாய் பல்லவி நடித்த படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா!

ஜோதிகா, சூர்யா, சாய் பல்லவி, கெளதம் ராமச்சந்திரன்
ஜோதிகா, சூர்யா, சாய் பல்லவி, கெளதம் ராமச்சந்திரன்

சாய் பல்லவி நடித்துள்ள ‘கார்கி’ படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அவர் நடித்து சமீபத்தில் வெளியான ’விராட பரவம்’ என்ற தெலுங்கு படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் அடுத்து முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்போது ’கார்கி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் தயாரித்து இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிளாக்கி ஜெனி மற்றும் மை லிஃப்ட் புட் புரொடக் ஷன்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2 டி என்டர் டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ’’இந்தப் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வெளியிடுவதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை. இவை அனைத்தையும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய விநியோகஸ்தர் சக்திவேலனுக்கும் ராஜசேகர பாண்டியனுக்கும் நன்றி’’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in