எதற்கும் துணிந்தவனுக்கு காத்திருக்கும் சோதனை?

தொடரும் ஜெய் பீம் சர்ச்சைகள்!
எதற்கும் துணிந்தவனுக்கு காத்திருக்கும் சோதனை?
சூர்யா

ஜெய் பீம் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் சூர்யா மீது பாயும் பாமகவினர் புதுவேகம் கண்டுள்ளனர்.

சூர்யாவுக்கு எதிரான தாக்குதல் மிரட்டல்கள், திரையரங்குகளில் ஓடும் அவரது திரைப்படத்தை மிரட்டி நிறுத்துவது, இழப்பீடு மற்றும் மன்னிப்பு கோரி வக்கீல் நோட்டீஸ் விடுத்தது, ஊர்தோறும் காவல் நிலையங்களில் குவியும் புகார்கள்.. என வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பிலான பாய்ச்சல்கள் பலவகை கண்டுள்ளன.

’எதற்கும் துணிந்தவன்’ சூர்யா
’எதற்கும் துணிந்தவன்’ சூர்யா

இவற்றின் வரிசையில். பொங்கலுக்கான சூர்யாவின் புதிய படம் வெளியாகும் தியேட்டர்கள்தோறும் போராட்டம் நடத்தப்போவதாக பாமகவினர் அறிவித்தனர். திருச்சி போன்ற மாநகரங்களின் பாமக நிர்வாகிகள், இனி சூர்யாவின் திரைப்படங்கள் தங்கள் ஊர்களில் வெளியாக விடமாட்டோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. இதற்கிடையே வேறு சில காரணங்களினால் எதற்கும் துணிந்தவனின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாகச் சொல்லப்பட்டது. அதன்படி ’எதற்கும் துணிந்தவன்’ பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.

Related Stories

No stories found.