வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா- ஜோதிகா!

வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா- ஜோதிகா!

நடிகர் சூர்யாவும், அவரது மனைவியுமான நடிகை ஜோதிகாவும் வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தனது மகிழ்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர், நடிகைகள் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு பேரும் சேர்ந்து தீபாவளி நல்வாழ்த்துகள் என்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in