அந்த ரோலில் நடிக்க உடனே ஓகே சொன்ன சூர்யா: `விக்ரம்’ படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

அந்த ரோலில் நடிக்க உடனே ஓகே சொன்ன சூர்யா: `விக்ரம்’ படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. நேற்று முன்தினம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

படத்தின் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார். ‘நான் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான விஷயமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். ஆனால், தகவல் வெளியே வந்து விட்டது. ஆமாம், சூர்யா நடித்திருக்கிறார்’ என்று கூறினார்.

கமல்ஹாசனின் இளவயது கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருப்பதாகவும் இதற்கான அழைப்பு கடைசி நேரத்திலேயே சூர்யாவுக்கு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு சூர்யா திரையில் வந்து போகிறார். இதற்கான படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடந்திருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த கதாபாத்திரத்திற்காக சூர்யாவை அணுகியதும் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் சூர்யா. நடிகர் கமல்ஹாசனை சினிமாவில் தனது வழிகாட்டியாக சூர்யா கருதுவதும் இந்த வாய்ப்பை அவர் மறுக்காமல் உடனே ஒத்து கொள்வதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

ஏற்கெனவே, நடிகர் கமலஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடிகர் சூர்யா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சிறப்பு தோற்றத்தில் வந்திருப்பார். நடிகர் சூர்யா தற்போது பாலா திரைப்படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, சுதா கொங்கரா படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in