15 மாதங்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீஸ் ஆன ’சூரரைப் போற்று’

15 மாதங்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீஸ் ஆன ’சூரரைப் போற்று’
சூரரைப் போற்று

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம், 15 மாதத்துக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகியுள்ளது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம், 'சூரரைப் போற்று'. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்தது. இதில், மோகன்பாபு, பரேஸ் ராவல், ஊர்வசி, கருணாஸ், கிருஷ்ணகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார். சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த 2020-ம் ஆண்டு, அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது.

மதுரை மிட்லாண்ட் தியேட்டரில்
மதுரை மிட்லாண்ட் தியேட்டரில்

ஓடிடியில் இந்தப் படம் நேரடியாக வெளியாவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் அப்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இனி சூர்யா படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று கூறினர். ஆனால், அந்தப் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தியேட்டரில் இப்போது வெளியானாலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 15 மாதங்களுக்குப் பிறகு, மதுரையில் தியேட்டர்களில் இன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள், தியேட்டர்கள் முன்பு பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.