நொய்டா திரைப்பட விழாவில் ‘ஜெய் பீம்’-க்கு 3 விருதுகள்

நொய்டா திரைப்பட விழாவில் ‘ஜெய் பீம்’-க்கு 3 விருதுகள்

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய் பீம்’படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

த.செ.ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்ற படம் ’ஜெய் பீம்’. இதை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதையைக் கொண்ட இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் சில காட்சிகளையும் இயக்குநர் ஞானவேல், படம் பற்றி பேசும் சில காட்சிகளையும் ஆஸ்கர் அமைப்பு தனது அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தது. ’சீன் அட் தி அகாடமி‘ என்ற தலைப்பில் இந்தக் காட்சிகள் வெளியாகி இருந்தது.

தமிழ்த் திரைப்படம் ஒன்றின் காட்சிகள், ஆஸ்கர் அமைப்பின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதன்முறை. இது, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புகழ்ந்தனர்.

இந்நிலையில் ’ஜெய் பீம்’ திரைப்படம், நொய்டாவில் நடைபெறும் 9-வது சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரபூர்வ திரையிடலுக்கு தேர்வானது. பல்வேறு நாட்டுத் திரைப்படங்கள் பங்கேற்ற இந்தப் படவிழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (லிஜோ மோல் ஜோஸ்) ஆகிய 3 விருதுகளை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in