ஆஸ்கர் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’

சூர்யா
சூர்யா

ஆஸ்கரின் யூடியூப் சேனலில், சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திரைப்படத் துறையின் மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர் விருதுகள். இந்த விருதைப் பெறுவது திரைக்கலைஞர்களின் கனவாக இருக்கிறது. அந்த ஆஸ்கர் அமைப்பின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில், ’சீன் அட் தி அகாடமி‘ என்ற தலைப்பில், சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அதில், தா.செ.ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்ற ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளையும் இயக்குநர் ஞானவேல், படம் பற்றிப் பேசும் சில காட்சிகளையும் ஆஸ்கர் அமைப்பு அதில் பகிர்ந்துள்ளது.

இது, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர். “நடிகர் சூர்யா, நம்மையும் இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்திவிட்டார்” என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கோல்டன் குளோப் 2022 விருதுக்கு, ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in