சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘எதற்கும் துணிந்தவன்’. கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மற்றும் சத்யராஜ், சூரி, வினய், சரண்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

சூர்யா
சூர்யா

இந்தப் படம் பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது மார்ச் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக, பொங்கலுக்கு வெளியாக வேண்டிய அஜித்தின் வலிமை, ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் உட்பட பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இப்போது அந்தப் படங்கள், ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்துள்ளன. அதனடிப்படையில் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலிஸும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in