சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சூர்யா நடிக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

'ஜெய் பீம்' படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ’எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். இவர், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்தவர். சத்யராஜ், வினய் ராஜ், ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், சரண்யா, சூரி உட்பட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் 4-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் 2.30 மணி நேரம் ஓடுவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in