`வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியதால் நஷ்டம் எவ்வளவு?

`வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியதால் நஷ்டம் எவ்வளவு?

‘வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியதால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த திரைப்படம் ‘வணங்கான்’. படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்த நிலையில் இதன் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கோவா பகுதியில் கடந்த ஜுன் மாதமே ஆரம்பிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், இதற்கிடையில் பாலாவுக்கும் சூர்யாவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது எனவும் சொல்லப்பட நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நடிகர் சூர்யாவின் தற்போதைய நடிக பிம்பத்திற்கு ஏற்றக் கதையாக ‘வணங்கான்’ இல்லை எனவும் அதனால், சூர்யா விலகி இருக்கிறார் எனவும் பாலா தரப்பில் சொல்லப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் சூர்யா படத்தைத் தயாரிக்கவும் செய்தார். ஆனாலும் முழுக்கதையையும் சூர்யாவிடம் பாலா சொல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த முதல்கட்டப் படப்பிடிப்பின் மூலம் தயாரிப்பாளராக சூர்யாவுக்கு கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய் நஷ்டம் எனவும் சொல்கிறது சினிமா வட்டாரம். ஆனால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in