நடிகர் விஜய்யின் `லியோ’ பிசினஸை முந்திய `சூர்யா42’?

விஜய் & சூர்யா
விஜய் & சூர்யாநடிகர் விஜய்யின் `லியோ’ பிசினஸை முந்திய `சூர்யா42’?

நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் ப்ரீ- பிசினஸை 'சூர்யா 42' முந்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் வெளியாவதற்கு முன்பே அதன் ப்ரீ-பிசினஸ் குறித்தான கவனம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய படமான 'லியோ'வின் ப்ரீ- பிசினஸ் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமம் உள்ளிட்ட ப்ரீ -பிசினஸ் தொகை 400 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றொரு படம் ‘சூர்யா 42’. 'சிறுத்த' சிவா இயக்கத்தில் பான் இந்திய அளவில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது ‘சூர்யா 42’. இதில் வரலாற்று காலத்தில் வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிகர் சூர்யா நடிக்கிறார். நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தின் ப்ரீ- பிசினஸ் தொகை 500 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது. 'சூரரைப்போற்று', 'ஜெய்பீம்', 'விக்ரம்' படங்களுக்கு அடுத்து குறிப்பாக ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுகள் வரை கவனம் பெற்றது போன்ற விஷயங்களால் 'சூர்யா 42' படத்தின் ப்ரீ- பிசினஸ் தொகை 'லியோ'வை முந்தியுள்ளதாக சொல்கிறது சினிமா வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in