மீண்டும் தொடங்கப்படும் ‘அருவா’: இயக்குநர் ஹரியுடன் இணையும் சூர்யா?

மீண்டும் தொடங்கப்படும் ‘அருவா’: இயக்குநர் ஹரியுடன் இணையும் சூர்யா?

இயக்குநர் ஹரியுன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் வெளியான ‘வேல்’, ‘சிங்கம்’ ஆகிய படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், மீண்டும் ஹரியுடன் ‘அருவா’ படத்தில் சூர்யா இணைவதாக தகவல் வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் இயக்குநர் பாலாவுடன் சூர்யா ‘வணங்கான்’ திரைப்படத்தில் இணைவதாக அறிவித்து முதல் கட்டப்படப்பிடிப்பும் முடிந்தது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் வருங்காலத்தில் நிச்சயம் பாலா படத்தில் இணைவேன் எனவும் அறிவித்து இருந்தார்.

இப்போது ‘வணங்கான்’ படத்திற்கு கொடுத்த கால்ஷீட்தான் ஹரி படத்திற்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கைவிடப்பட்ட ‘அருவா’ படம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in