`தலைவர் 170’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் சூர்யா?

‘தலைவர் 170’
‘தலைவர் 170’ `தலைவர் 170’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் சூர்யா?

‘தலைவர் 170’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். படத்தில் இவருக்கான போர்ஷன் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’ படத்தில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, அடுத்து ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘தலைவர் 170’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில்தான் நடிகர் சூர்யா 15 நிமிட கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக ஆர்வலராகவும் நடிக்க இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ’ஜெய்பீம்’ படத்திற்குப் பிறகு ஞானவேலுடன் சூர்யா மீண்டும் முழுநீள படம் ஒன்றில் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in