`தளபதி 67’-ல் நடிக்கும் சூர்யா?

`தளபதி 67’-ல் நடிக்கும் சூர்யா?

‘தளபதி 67’ படத்தில் நடிகர் சூர்யாவும் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

’விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் 67-வது படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் ‘ராங்கி’ படத்திற்கான பேட்டியின் போது ‘தளபதி 67’ குறித்து நடிகை த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அடுத்த வருடம் பேசலாம். அடுத்த வருடம் ஜனவரியில் ‘தளபதி 67’ படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கும் என பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த பகுதியை காணொளியாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்க இந்த வீடியோவை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் லைக் செய்திருக்கிறார். இதனால், லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் போல சிறப்புத் தோற்றத்தில் லோகேஷ் யுனிவர்சில் இந்தக் கதையில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in