பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா

ஜோதிகாவுக்கு முக்கிய ரோல்
பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா
Updated on
1 min read

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான நந்தா, பிதாமகன் படங்கள் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா- ஜோதிகா இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க படங்களில் நடித்தனர். தற்போது சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜோடியாக இருவரும் நடிக்கவில்லையாம். இருவரும் தனித்தனி கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யா தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in