சூர்யாவுடன் இணைந்து வேற லெவல் வொர்க்கவுட்...மாஸ் காட்டும் ஜோதிகா!

ஜிம்மில் சூர்யா, ஜோதிகா
ஜிம்மில் சூர்யா, ஜோதிகா

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை ஜோதிகா ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஜோடியாக செய்திருக்கும் இந்த வொர்க்கவுட்டுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

திருமணமாகி இருபது வருடங்களாகியும் காதல் குறையாமல் இருக்கின்றனர் நடிகர்கள் சூர்யா- ஜோதிகா. அதிலும் தற்போது இருவரும் இணைந்து ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சமீப காலமாக நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தனது சமூகவலைதளத்திலும் இதுகுறித்தான வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இதில் தனது கணவர், சூர்யாவுடன் இணைந்து கப்புள் வொர்க்கவுட் செய்திருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஜோதிகா. ’டபுள் ஸ்வெட், டபுள் ஃபன்’ என்ற கேப்ஷனோடு இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.

குழந்தைகளின் படிப்பிற்காக சூர்யா- ஜோதிகா இப்போது மும்பையில் வசித்து வருகின்றனர். இருவருமே தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். சூர்யாவும் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இப்போது ஜோதிகாவுடன் சேர்ந்து, ஒரே ஜிம்மிலும், மொட்டை மாடியிலும் வியர்வை சிந்த வொர்க்கவுட் செய்திருக்கின்றனர்.

சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்பாராஜூடன் ‘சூர்யா 44’ படத்திற்காக இணைந்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், அதற்கான பணிகளில் சூர்யா பிஸியாக உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in