மதுரை எம்பி சு.வெங்கடேசன் கதையில் நடிக்கிறார் சூர்யா!

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

நடிகர் தனுஷ் நடிக்க ஆசைப்பட்ட கதையில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை எம்பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய கதை 'வேள்பாரி'. ஆனந்த விகடன் புத்தகத்தில் தொடராக வெளியாகி வாசகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த கதை நடிகர் தனுஷூக்கு மிகவும் பிடித்துப் போக, அதை படமாக்க விரும்பியதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இப்போது, இந்த கதையை இயக்குநர் ஷங்கர் மிக பிரம்மாண்ட முறையில் படமாக்க இருப்பதாகவும், இதில் சூர்யா நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற 'விருமன்' பட விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் ஆரம்பித்து விட்டதாகவும், விரைவில் அது குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், நேற்று நடிகர் சூர்யாவின் 42-வது படமாக இயக்குநர் 'சிறுத்தை' சிவாவுடன் இணையும் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதுவும் 3டி-யில் சரித்திர படமாக உருவாகி வருகிறது. 'வேள்பாரி'க்கு முன்னதாகவே, இந்த படம் ஒரு ட்ரெயலாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எழுத்தாளர் சு.வெங்கடேசன்- சூர்யா இணையும் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in