பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு அசத்தலான டைட்டில்!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு அசத்தலான டைட்டில்!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா, 'எதற்கும் துணிந்தவன்' படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிட்டிருந்தனர். இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில், சூர்யாவிற்கும் பாலாவிற்கும் மோதல் என்றும் இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் கூறப்பட்டது. அது தவறானத் தகவல் என்று சூர்யா தரப்பு மறுத்திருந்தது.

இந்நிலையில், இயக்குநர் பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்துக்கு 'வணங்கான்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். அதில், ’’உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா’’ என்று கூறியுள்ளார்.

’வணங்கான்’ என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in