
’சிறுத்த’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.
நடிகர் சூர்யா தனது 42-வது படத்திற்காக மெகா பட்ஜெட்டில் ‘சிறுத்த’ சிவாவுடன் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 13 மொழிகளில் 3டி மற்றும் 2டியில் உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான செட்கள் சென்னையில் அமைக்கப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
திஷா பட்டானி இந்தப் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். சமீபத்தில் அவர் சமூகவலைதளங்களில் மார்ஷியல் ஆர்ட் பயிற்சி வீடியோவை வெளியிட்டிருந்தார். அதனால், அவரும் இந்த ஆக்ஷன் காட்சிகளில் பங்கேற்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வர இருக்கும் பீரியாடிக் போர்ஷன் மார்ச்-ஏப்ரலில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். படம் இந்த வருடம் இரண்டாம் பாதியில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.