சொன்னதை செய்த பிரபல ஹீரோ: பாராட்டும் ரசிகர்கள்

சொன்னதை செய்த பிரபல ஹீரோ: பாராட்டும் ரசிகர்கள்

பிரபல நடிகர் சொன்னதை செய்ததை அடுத்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழில், அஜித்தின் 'தீனா', சரத்குமாரின் ’சமஸ்தானம்’, ஷங்கரின் ’ஐ’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. விஜய் ஆண்டனியின் ’தமிழரசன்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

கரோனா காலகட்டத்தில், கேரள மிமிக்ரி கலைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த நடிகர் சுரேஷ் கோபி, ஒவ்வொரு படத்துக்கும் தான் வாங்கும் அட்வான்ஸ் தொகையில் ரூ.2 லட்சத்தை கேரள மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்குவேன் என்று அப்போது அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் ’ஒட்டகொம்பம்’ என்ற படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் ரூ.2 லட்சத்தை இந்தச் சங்கத்துக்கு வழங்கினார். இப்போது அவருடைய 255-வது படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இருந்து கேரள மிமிக்ரி சங்கத்துக்கு ரூ.2 லட்சத்தை வழங்கியுள்ளார். அந்தச் சங்கத்தின் நதிர் ஷா என்பவரிடம் இதை வழங்கியுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொன்னதை செய்து வரும் நடிகர் சுரேஷ் கோபியை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in