சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

பிரபல நடிகையின் மகள், நடிகையாக சினிமாவில் அறிமுக மாகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர், சுரேகா வாணி. தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி?', விக்ரமின் 'தெய்வமகள்', விஜய்யின் 'மெர்சல்', அஜித்தின் 'விஸ்வாசம்', தனுஷின் 'உத்தமபுத்திரன்', சிம்பு நடித்த 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கணவர் சுரேஷ்தேஜா கடந்த 2019-ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இவர்களுக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார்.

நடிகை சுரேகா வாணியுடன் சுப்ரியா
நடிகை சுரேகா வாணியுடன் சுப்ரியா

அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர், விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இவர் தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.

நடிகை லட்சுமி மன்சு, ’லச்சிண்டி மகிளா லோகம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக், அர்ஜுன் இயக்கும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா தாஸ், ஹேமா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் சுரேகா வாணியின் மகள் சுப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை சுரேகா வாணியுடன் சுப்ரியா
நடிகை சுரேகா வாணியுடன் சுப்ரியா

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in