'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் - அக்‌ஷய்குமாருடன் இருக்கும் படத்தை பதிவிட்டு சூர்யா மகிழ்ச்சி!


'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் - அக்‌ஷய்குமாருடன் இருக்கும் படத்தை பதிவிட்டு சூர்யா மகிழ்ச்சி!
அக்‌ஷய் குமாருடன் சூர்யா...

தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் 'சூரரைப் போற்று' படத்தில் அக்‌ஷய் குமாருடன் சூர்யா நடிக்கிறார். அது தொடர்பான புகைப்படம் ஒன்றை தற்போது பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ல் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. நடிகர் சூர்யாவுக்கு அவருடைய சினிமா பயணத்தில் முக்கியமான ஒரு படமாக இது அமைந்தது. அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் கரோனா முடக்கம் காரணமாக திரையரங்கிற்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இப்பொழுது 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் அக் ஷய் குமாரை முதன்மையான கதாபாத்திரமாக கொண்டு ரீமேக் ஆகி வருகிறது. இந்தியிலும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் நடிகர் சூர்யா இப் படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அக் ஷய் குமாருடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இப்போது பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பகிர்ந்து ‘அக்‌ஷய் குமார் சார் உங்களை இந்த படத்தில் வீரராகப் பார்ப்பது எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டு வருகிறது. நம்முடைய கதையை மீண்டும் உயிர்ப்பித்து மிக அழகாக 'மாறா'வாக சுதா கொங்கரா உருவாக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கில் கேமியோ கதாபாத்திரத்தில் நான் நடிப்பதையும், இந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக செலவு செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் சூர்யா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in