ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மோகன்லால் படம்!

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மோகன்லால் படம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புதிய படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஜீத்து ஜோசப்பும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்துள்ள படம், ‘ட்வெல்ஃப்த் மேன்’ (12th Man). த்ரில்லர் படைப்பாக உருவாகியிருக்கும் இப்படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். மோகன்லாலுடன் உன்னி முகுந்தன், ஷிவதா, அனுஸ்ரீ, அனு சித்தாரா, சைஜூ குரூப், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனில் ஜான்சன் இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. 24 மணி நேரத்துக்குள் நடக்கும் கதையைக் கொண்ட இந்த த்ரில்லர் படம் தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. படத்தைப் பெரும் தொகை கொடுத்து அந்நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.