சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தாய் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தாய் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் கிருஷ்ணா. இவர் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரது மனைவி இந்திராதேவி. இவர்களது மகன் தான் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ்பாபு.

கடந்த சில நாட்களாக மகேஷ்பாபுவின் தாயார் இந்திராதேவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல்நலம் மிகவும் மோசமான நிலையில், சிறிது நேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். தற்போது அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் இந்திரா தேவியின் உடல் வைக்கப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in