
தீபாவளியன்று திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ரசிகர்கள் பட்டாசு வெடித்ததால் அங்கிருந்த பார்வையாளர்கள் சிதறி ஓடும்படியான வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தீபாவளி விடுமுறை தினத்தை ஒட்டி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் ‘டைகர் 3’ படம் வெளியானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சல்மான் கானின் படம் தீபாவளி விடுமுறைக்கு வெளியாகி இருக்கிறது என்பதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருந்தனர்.
பொதுவாக, படம் வெளியாகிறது என்றால் ஹீரோக்களுக்கு கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, திரையரங்கிற்கு வெளியே பட்டாசு வெடிப்பது, கேக் வெட்டுவது போன்ற கலாட்டாக்களை ரசிகர்கள் செய்வார்கள். ஆனால், இந்த ‘டைகர்3’ பட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஒருபடி மேலே போய், திரையரங்கிற்கு உள்ளேயே பட்டாசு வெடித்து அதகளப்படுத்தியுள்ளனர்.
இதனால், படம் பார்க்க வந்த பார்வையாளர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடும்படியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!
ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!
பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!
திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!
300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!