சூப்பர் ஸ்டார் சர்ச்சை: சரத்குமாருக்கு ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்துடன் சரத்குமார்...
ரஜினிகாந்த்துடன் சரத்குமார்...

சூப்பர் ஸ்டார் சர்ச்சை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன ‘காகம்-கழுகு’ குட்டிக் கதை மூலம் விஜய் vs ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் சண்டை இணையத்தில் மீண்டும் பற்றிக் கொண்டது. மேலும், முன்பு நடைபெற்ற ‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை குறிப்பிட்டு அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அன்றே கணித்தேன் என மேடையில் சரத்குமார் பேசினார்.

இது குறித்து சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, ‘இந்த சூப்பர் ஸ்டார் கருத்து சர்ச்சை குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் பேசினேன். நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தேன் என ரஜினியிடம் சொன்னேன். நான் என்ன அர்த்தத்தில் சொன்னேன் என்பதையும் அந்த முழு சூழ்நிலையையும் ரஜினி புரிந்து கொண்டு, அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்’ என தெளிவுப்படுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in