'டாணாக்காரனுக்கு' சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

'டாணாக்காரனுக்கு' சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

'டாணாக்காரன்' படத்தைப் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் பாராட்டியதாக நடிகர் விக்ரம் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் காவலர் பயிற்சி மையத்தைக் கதைக்களமாகக் கொண்டு வெளியாகி உள்ள படம் 'டாணாக்காரன்'. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 8-ம் தேதி வெளியானது. தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத கதைக்களத்தைக் கொண்ட படம் என்பதால் பரவலான பாராட்டுக்களை இப்படம் பெற்றுள்ளது. படத்தின் ஹீரோவாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். மேலும் லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதனராவ், அஞ்சலி நாயர், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், விக்ரம் பிரபுவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள விக்ரம் பிரபு, “சூப்பர் ஸ்டார் அவர்களே, எனது நடிப்பைப் பாராட்ட அழைப்பது எவ்வளவு பெரிய உணர்வு. நான் கனவு கூட காணாத ஒன்றைச் சாதித்தேன். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றினால், வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகள் உண்டாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in