சன்னி லியோனின் அடுத்த தமிழ்ப் படம்

சன்னி லியோனின் அடுத்த தமிழ்ப் படம்

தமிழில் சன்னி லியோன் அறிமுகமான ‘வடகறி’ திரைப்படத்தையடுத்து, அவர் நடிக்கவிருந்த சரித்திரப் படம் ‘வீரமாதேவி’. இத்திரைப்படம், முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பாதியில் நின்றது. அதையடுத்து தற்போது தமிழில் யுவன் இயக்கத்தில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காகச் சமீபத்தில் சென்னை வந்திருந்தார் சன்னி லியோன். அப்போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் என அனைத்தையும் ஒரே கட்டமாகப் படமாக்கி முடித்து விட்டார்கள். இந்தத் தகவலை ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இயக்குநர் யுவன் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சன்னி லியோன், ஒரு ராணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ‘ஷெரோ’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் சன்னி லியோன். இத்திரைப்படம், தமிழ் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in