சன்னி லியோன் நடனம் இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது - நாவல் கிரி மகாராஜ்

சன்னி லியோன் நடனம் இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது - நாவல் கிரி மகாராஜ்

1960-ம் ஆண்டு பாலிவுட்டில் எஸ்.யூ. சன்னி இயக்கத்தில் திலீப் குமார், மீனா குமாரி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோஹினூர்’. இத்திரைப்படத்தில் புகழ்பெற்ற பாலிவுட் இசையமைப்பாளர் நௌஷத்தின் இசையில் உருவான பாடல் ‘மதுபான் மெய்ன் ராதிகா’. இத்திரைப்பாடலைச் சமீபத்தில் ரீமேக் செய்து கணேஷ் ஆச்சார்யா இயக்கி வடிவமைக்க, சன்னி லியோன் நடனமாடியுள்ளார். பழைய பாடல்களைத் தொடர்ந்து ரீமேக் செய்துவரும் சரீகாமா நிறுவனம், இப்பாடலைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாவல் கிரி மகராஜ்
நாவல் கிரி மகராஜ்

இந்நிலையில் சன்னி லியோன் நடனமாடியுள்ள இந்த வீடியோ இந்து மதத்தை அவமதிப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இப்பாடலைத் தடை செய்யக்கோரி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேசம் மதுராவைச் சேர்ந்த தலைமை மத குருவான நாவல் கிரி மகராஜ் கூறும்போது, “கிருஷ்ணர் - ராதையின் காதலைப் பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா’ பாடலுக்கு, நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. அந்தப் பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அவர் இந்தியாவிலேயே இருக்க முடியாது” என்று எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in