சன்னி லியோன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

சன்னி லியோன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

இந்திப் படங்கள் மட்டுமல்லாமல், தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்திவருகிறார் சன்னி லியோன். தற்போது, தமிழில் யுவன் இயக்கியுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சன்னி லியோன். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ‘ஜீரோ’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது கரோனா விழிப்புணர்வு குறித்த ஒரு காணொலியை அவர் வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பிடியில் சிக்கி மக்கள் தவித்து வருவதை வெளிப்படுத்தும் வகையில், சிறைக் கம்பிகளுக்குள் தான் சிக்கித்தவிப்பது போன்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது போன்றும் ஒரு காணொலியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in