சன்னி லியோன் உதட்டுக் காயத்தில் ஒளிந்திருக்கும் பாடம் என்ன?

சன்னி லியோன் உதட்டுக் காயத்தில் ஒளிந்திருக்கும் பாடம் என்ன?

சினிமா நட்சத்திரங்களுக்கு சிறிய கீறல் என்றாலும் அவருடைய ரசிகர்கள் துடித்துப்போவார்கள். அதிலும் நடிகை சன்னி லியோன் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து பொதுவெளியில் பதிவிட்டு, ரசிகர்களின் துடிப்பைக் கூட்டியதோடு, பாடம் ஒன்றையும் புகட்டியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பதிவுகள் வாயிலாக எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் சன்னி லியோன். இன்ஸ்டாவில் தன்னை பின்தொடர்வோரின் தவிப்பை பூர்த்தி செய்யும் நோக்கில், விளம்பர இடைவேளைகளுக்கு மத்தியில் படங்கள், வீடியோ என கலக்குவதும் உண்டு. அண்மையில் அப்படி ஒரு வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களை தவிக்கச் செய்திருக்கிறார்.

நள்ளிரவில் படுக்கையறையில் பதிவான அந்த வீடியோவில், தனது உதட்டில் ஏற்பட்ட காயத்தையும், அதனை கண்டுகொள்ளாது அருகில் உறங்கும் கணவனையும் காட்டி பேசுகிறார். அந்த வீடியோவுக்கான ஆடியோவை சொடுக்கினால் மட்டுமே சன்னி லியோன் சொல்ல வந்த சேதியின் முழு பரிமாணம் பிடிபடுகிறது.

அதன்படி, செஃல்பி எடுக்கும் முயற்சியில் சன்னி லியோன் முகத்தில் செல்ஃபோன் விழுந்ததில் ஏற்பட்ட காயம் அது. மேலுதட்டின் உட்புறம் காயம் மற்றும் இரத்தக்கசிவு இருப்பதாக புலம்பியிருக்கிறார் சன்னி லியோன்.

சன்னி லியோன் சொன்னதில் முக்கிய பாடமும் இருக்கிறது. செல்ஃபோன் கையாள்வதில் அனுகூலங்களுக்கு இணையாக விபரீதங்களும் இருக்கின்றன. செல்ஃபோன் கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய் ஏற்படுவது குறித்தான ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.

இரவில் செல்போன் அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக கண்கள் பாதிப்பு, அதிக நேரம் காதில் வைத்து பேசுவதால் மூளை மற்றும் காதுகள் பாதிப்பு, சட்டையின் இடது பாக்கெட்டில் வைப்பதால் இதயத்துக்கும், பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால் ஆண்களின் உயிரணுக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் நீண்டு வருகின்றன.

இவற்றோடு செல்போன் பேசும்போது நிகழும் வாகன விபத்துக்களும், சுற்றுலா தலங்களில் செல்ஃபி மோகத்திலான விபத்துகளும் இடம்பெறுகின்றன. இந்த இரண்டும் உயிர்களை பலிகொள்ளும் அளவுக்கு விபரீதம் வாய்ந்தவை. குறிப்பாக மலைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகே செல்ஃபி எடுக்க முயன்றதில் பலியானவர்கள் எண்ணிக்கை விடுமுறைகள் தோறும் செய்தியாகி வருகின்றன.

இந்த வரிசையில் சன்னி லியோனின் விசித்திர அனுபவமும் சேர்கிறது. படுக்கையில் சாய்ந்தவாறு செல்ஃபோனில் துழாவுவது நமது வழக்கமாக உள்ளது. அவ்வாறு வெளி வெளிச்சமின்றி செல்ஃபோன் திரையை நீண்ட நேரம் பார்க்கும்போது படிப்படியாய் பார்வை இழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்ததாக, படுக்கையறை செல்ஃபோன் உபயோகத்தின் இன்னொரு அபாயமாக, தூக்கக் கலக்கத்தில் செல்ஃபோன் கைநழுவி முகத்தில் விழுவதால் எழும் காயங்கள் தனி! சன்னி லியோனின் உதட்டுக் காயமும் இதில் அடங்கும். தனது அனுபவத்தை ரசிகர்களுக்கான பாடமாக வெளிப்படுத்தும் சன்னி லியோன் வீடியோக்களின் வரிசையில் அண்மை பதிவும் சேர்ந்திக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in