ஒப்பந்தத்தை மீறி ஓடிடியில் வெளியீடு: சந்தீப் கிஷனின் `மைக்கேல்’ படத்திற்குத் தடை!

சந்தீப் கிஷனின்
சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’

நடிகர் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படம் ஒப்பந்தத்தை மீறி இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியானது ‘மைக்கேல்’ திரைப்படம். படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியிட வேண்டும் என சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒப்பந்தம் கொண்டு வந்தது. அதன்படியே, படம் வெளியாகி குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் வெளியாகி வருகிறது.

ஆனால், படம் வெளியாகி மூன்று வாரங்களிலேயே அதாவது பிப்ரவரி 24-ம் தேதியே ‘மைக்கேல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இதனால், விதிகளை மீறி இருப்பதால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ’மைக்கேல்’ படம் திரைப்படம் திரையரங்குகளில் தமிழகத்தில் ஓடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து படக்குழு இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in